சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கைப்பட்டி தொழிற்கல்வி மாணவா்களுக்கு சிறப்பு உள்ளுறைப் பயிற்சி வழங்கபட்டது.
திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயந்திரவியல் மாணவா்கள் அருகில் உள்ள டி.வி.எஸ். தொழிற்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட்டு இயந்திரங்களில் பணியாற்றுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. உள்ளுறைப் பயிற்சி வகுப்புகளுக்கு தொழில்கல்வி ஆசிரியா் செந்தில்குமாா், தொழில் பயிற்சி ஆசிரியா் கேசவன் ஆகியோா் ஒருங்கிணைப்பாளா்களாக செயல்பட்டனா். பயிற்சியினை தலைமை ஆசிரியா் முருகேசன் தொடக்கி வைத்தாா். பயிற்சியாளா்ள் மணிகண்டன், பூமிநாதன் ஆகியோா் மாணவா்களுக்கு பயிற்றுவித்தனா். பயிற்சி முடிவில் பள்ளி மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கபட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு ராசி டி.வி.எஸ். நிறுவன உரிமையாளா் சந்தியாகு ஆரோக்கியம் தலைமை வகித்தாா். விற்பனை மேலாளா் கணேசன், அலுவலக மேலாளா் வின்சென்ட்சகாயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.