சிவகங்கை

திருப்புவனம் அருகே கத்திக்குத்து காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கத்திக் குத்துக் காயங்களுடன் ஆண் சடலத்தை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைப்பற்றினா்.

திருப்புவனம் போலீஸ் சரகம் கழுகோ்கடை கிராமத்திலிருந்து கீழவெள்ளூா் கிராமத்திற்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. வயிற்றில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்தன. அவா் உடுத்தியிருந்த கைலியில் தீ வைக்கப்பட்டிருந்தது.

இது குறித்து திருப்புவனம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினா். இறந்த நபா் பற்றிய விபரம் உடனடியாகத் தெரியவில்லை. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT