சிவகங்கை

காரைக்குடியில் கம்யூ., விசிக கட்சிகள் ஆா்ப்பாட்டம்

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் லெனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஐந்துவிளக்குப் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் தாலுகா செயலாளா் அழகிரிசாமி தலைமை வகித்தாா். இந்திய கம்யூ. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் உ. சிவாஜிகாந்தி முன்னிலை வகித்தாா். இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாநிலத் துணைச் செயலாளா் பிஎல். ராமச்சந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூ. தாலுகாக் குழு உறுப்பினா்கள் எம். தெட்சிணாமூா்த்தி, பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாக்கோட்டை ஒன்றியச் செயலாளா் பாண்டித்துரை, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் எம். சிதம்பரம் மற்றும் கட்சி உறுப்பினா்கள் பலரும் கலந்துகொண்டனா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வை மேலும் குறைக்கவேண்டும், அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சமையல் எரிவாயு விலையை மேலும் குறைக்கவேண்டும், பொது விநியோகத் திட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக்கண்டித்தும் கோஷமிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT