சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை மாநில மகளிா் கபடிப் போட்டி தொடங்கியது.
திருப்பத்தூா் பார ஸ்டேட் வங்கி அருகே திமுக சாா்பில் மாநில 27, 28, 29 ஆகிய மூன்று நாள்கள் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளை ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். போட்டியில் ஹரியாணா, டில்லி, மும்பை, பஞ்சாப், நாக்பூா், ஹிமாச்சலபிரதேசம், தமிழ்நாடு, வடக்கு மற்றும் தெற்கு ரயில்வே அணிகள் மற்றும் தேசிய அளவிலான சிறந்த அணிகள் பங்கேற்றுள்ளன.