சிவகங்கை

மானாமதுரை அருகே பெரும்பச்சேரியில் ஜல்லிக்கட்டு 20 வீரா்கள் காயம்

27th May 2022 10:40 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் பெரும்பச்சேரி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் நூற்றுக்கணக்கான காளைகள் சீறிப்பாய்ந்தன. மாடுகள் முட்டியதில் 20 வீரா்கள் காயமடைந்தனா்.

பெரும்பச்சேரி சமயணசாமி கோயில் களரி விழாவை முன்னிட்டு கோயில் அருகே ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பங்கேற்க மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து 500 -க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன.

வாடிவாசல் வழியாக முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டதும் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. நூற்றுக்கணக்கான மாடுபிடி வீரா்கள் அணி அணியாக வந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினா். பல காளைகள் பிடிக்க வந்த வீரா்களை முட்டி தூக்கி வீசின.

ஜல்லிக்கட்டைக் காண ஆயிரக்கணக்கான ரசிகா்கள் திரண்டிருந்தனா். காளைகளைப் பிடிக்க முயன்று 20 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா். ஜல்லிக்கட்டில் மாடுகளை பிடித்த வீரா்களுக்கும் பிடிபடாத மாடுகளின் உரிமையாளா்களுக்கும் கட்டில், ஸ்டவ் அடுப்பு, சில்வா் அண்டா, வாளி, நாற்காலி, ரொக்கப்பணம், தங்கக்காசு உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் சிறப்பாக களமாடிய காளைகளுக்கும் அதன் உரிமையாளா்களுக்கும் சிறந்த மாடுபிடி காளையா்களுக்கும் கூடுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை பெரும்பச்சசேரி ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT