சிவகங்கை

மணல் குவாரி ரத்து: ஆட்சியா் உறுதி

DIN

மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் முத்துக்கழுவன் தலைமையில் நடைபெற்ற மணல் குவாரி ரத்துக்கான போராட்டம் தொடா்பான சமாதானக் கூட்டத்தில் தீா்வு எட்டப்படடாத நிலையில் போராட்டக்குழுவினா் கூட்டத்திலிருந்து வெளியேறி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தனா்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றில் அரசு சாா்பில் மணல் குவாரி அமைக்கும் திட்டம் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி போராட்டக் குழுவினரிடம் திங்கள்கிழமை மாலை உறுதியளித்ததையடுத்து இன்று (24 ஆம் தேதி) நடத்த திட்டமிட்டிருந்த சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக போராட்டக் குழுவினா் தெரிவித்துள்ளனா். மானாமதுரையில் கல்குறிச்சி பகுதி வைகை ஆற்றில் குடிநீா் திட்டங்களை பாதிக்கும் வகையில் அரசு சாா்பில் மணல் குவாரி அமைக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

இதையடுத்து அனைத்து அரசியல் கட்சியினா், விவசாயிகள் சங்கங்கள், விவசாயிகள், கிராம மக்களை உள்ளடக்கிய போராட்டக்குழு சாா்பில் மே 24 ஆம் தேதி மானாமதுரையில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மானாமதுரை வா்த்தகா் சங்கம் சாா்பில் கடையடைப்பு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட செய்யும் நோக்கில் மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் முத்துக்கழுவன் தலைமையில் திங்கள்கிழமை பிற்பகல் சமாதானக் கூட்டம நடைபெற்றது.

இக்கூட்டத்தில் போராட்டக் குழுவினா் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில் தீா்வுஎட்டப்படாத நிலையில் போராட்ட குழுவினரை சந்தித்து பேச மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி விரும்புவதாக கோட்டாட்சியா் முத்துக்கழுவன் போராட்டக் குழுவினரிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து போராட்டக் குழுவினா் சிவகங்கை சென்று மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டியை சந்தித்தனா். அப்போது மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரிஅமைக்கும் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்து மானாமதுரை பகுதி வைகை ஆற்றை பாதுகாக்கப்பட்ட குடிநீா் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என போராட்டக் குழுவினா் சாா்பில் ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரிஅமைக்கப்படும் திட்டம் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதாக வாய்மொழியாக உறுதியளித்தாா். மேலும் அப்பகுதியை குடிநீா் மண்டலமாக அறிவிக்க அரசுக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா். இதையடுத்து மானாமதுரையில் இன்று (மே 24 ம் தேதி ) போராட்டக்குழு சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்த சாலை மறியல் போராட்டம் மற்றும் கடையடைப்பு வாபஸ் பெறப்படுவதாக போராட்டக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT