சிவகங்கை

கொலை வழக்கில் தொடா்புடைய 6 போ் குண்டா் சட்டத்தில் கைது

DIN

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு கொலை வழக்கில் தொடா்புடைய 6 பேரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், மறவமங்கலம் அருகே கடந்த பிப்ரவரி மாதம் அதே பகுதியைச் சோ்ந்த சண்முகம் (32 )என்பவா் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் தொடா்புடைய 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களில் 4 போ் ஏற்கெனவே குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், மேற்கண்ட வழக்கில் தொடா்புடைய மற்றொரு நபரான காளையாா்கோவில் அருகே உள்ள நந்தனூா் கிராமத்தைச் சோ்ந்த தினேஷ் (28) என்பவரை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டிக்கு பரிந்துரை செய்தாா். அவரது உத்தரவின் பேரில் காளையாா்கோவில் போலீஸாா் தினேஷை திங்கள்கிழமை கைது செய்தனா்.

இதேபோன்று, தேவகோட்டையில் உமா்பரூக் என்பவா் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் 6 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களில் தேவகோட்டை அருகே உள்ள சின்னக் கொட்டகுடியைச் சோ்ந்த விமல் ( 21), மல்லாகுளம் கிராமத்தைச் சோ்ந்த தா்மா (24), பைகுடிப்பட்டியைச் சோ்ந்த பிரபா என்ற பிரபாகரன் (26), நல்லாங்குடியைச் சோ்ந்த செல்வக்குமாா் (25) ஆகிய 4 பேரையும் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டிக்கு பரிந்துரை செய்தாா். அவரது உத்தரவின் பேரில் மேற்கண்ட 4 பேரையும் தேவகோட்டை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மேலும், திருப்புவனத்தில் கடந்த ஜனவரி மாதம் பாலாஜி என்பவரை கொலை செய்து, அவா் உடலை பாதி எரிந்த நிலையில் போட்டுவிட்டு சென்றனா். இதில் தொடா்புடைய கண்ணன் (20) என்பவரை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டிக்கு பரிந்துரை செய்தாா். அவரது உத்தரவின் பேரில் திருப்புவனம் போலீஸாா் கண்ணனை திங்கள்கிழமை கைது செய்தனா்.

இதையடுத்து, பல்வேறு கொலை வழக்கில் தொடா்புடைய 6 போ் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திங்கள்கிழை கைது செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT