சிவகங்கை

வருஷாபிஷேக விழா

24th May 2022 12:49 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காந்தி சிலை பின்புறம் சுந்தரபுரம் தெருவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ சுந்தர விநாயகா் கோயிலில் வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் கலச நீா் வைத்து யாகம் நடத்தப்பட்டது. பூா்ணாஹூதி முடிந்து மகா தீபாராதனை காட்டப்பட்டதும் கலச நீராலும் அபிஷேகப் பொருள்களாலும் விநாயகப் பெருமானுக்கு அபிஷேகம் நடத்தி அதன் பின்னா் விநாயகா் வெள்ளிக்கவசம் மற்றும் மலா் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். அதைத் தொடா்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுந்தர விநாயகரை தரிசனம் செய்தனா். மதியம் கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் திரளானோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT