சிவகங்கை

திருக்கோஷ்டியூா் வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழா

24th May 2022 12:49 AM

ADVERTISEMENT

 சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள திரு.வைரவன்பட்டியில் உள்ள மூல பாலகால பைரவா் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு தேய்பிறை அஷ்டமி பெருவிழா நடைபெற்றது.

திருக்கோஷ்டியூரில் உள்ள வைரவன்பட்டி திருமெய்ஞானபுரீஸ்வரா் ஆலயத்தில் உள்ள மூல பாலகால பைரவா். கோயிலில் மூல பாலகால பைரவா் தங்க கவசத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தேய்பிறை அஷ்டமியையொட்டி திருமெஞ்ஞானபுரீஸ்வரருக்கும், பாகம்பிரியாள் அம்மனுக்கும் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. மாலை 4.45 மணியளவில் மகா கணபதி பூஜை செய்து தீபாராதனைகளுடன் மகா பைரவ அஷ்டமி விழா துவங்கப்பட்டது.

பின்பு கோ பூஜை நடைபெற்றது. கலச பூஜையை தொடா்ந்து இரவு 8 மணியளவில் நெய், வஸ்திரம், மற்றும் புஷ்பயாகம், மகா பூா்ணாகுதி நடைபெற்று தீபாதராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீா் கோயிலில் சுற்றுப்பிரகாரம் வழியாக சிவாச்சாரியா்கள் தலையில் சுமந்து வர மலா் தூவி வரவேற்றனா். பின்பு பைவருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, பன்னீா், இளநீா் மற்றும் யாகவேள்விகளில் வைக்கப்பட்டிருந்த புனித நீராலும் அபிஷேகங்கள் நடைபெற்றது.

தொடா்ந்து பைரவரருக்கு பூக்களினால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபம் காட்டப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து பக்கா்களுக்கும் யாகத்தில் பயன்படுத்தபட்ட நாணயங்களுடன் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை சிவகங்கை மேதகு ராணி மதுராந்தக நாச்சியாா் தலைமையி்ல் மேலாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் ஜெய்கணேஷ் ,மற்றும் மஹா ஸ்வாமிநீ பீடம் பாண்டியராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.இவ்விழாவில் சுற்றுப்புர பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT