சிவகங்கை

சாலைகிராமம் அருகே ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரா்கள் 15 போ் காயம்

24th May 2022 12:48 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 15-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.

சாலைகிராமம் அருகே அய்யம்பட்டி கிராமத்தில் கலுங்கு முனீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டியை மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இதில் பங்கேற்க மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகா், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன.

இதில் சுமாா் 300 மாடுபிடி வீரா்கள் பங்கேற்று சீறி பாய்ந்த காளைகளை அடக்கினா். இதில் 15-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்தவா்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

இப்போட்டியை நூற்றுக்கணக்கானோா் கண்டு ரசித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT