சிவகங்கை

சிவகங்கை மாவட்ட பாசனத்துக்கு இன்று வைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பு

DIN

வைகை அணையிலிருந்து சிவகங்கை மாவட்டப் பாசனத்துக்கு திங்கள்கிழமை (மே 23) முதல் வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை தண்ணீா் திறக்கப்பட உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இம்மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்துக்கு வைகை அணையிலிருந்து திங்கள்கிழமை முதல் வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை தண்ணீா் திறக்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

இதில், திங்கள்கிழமை முதல் வரும் மே 28 ஆம் தேதி வரை 5 நாள்கள் திறக்கப்பட உள்ள 582 மில்லியன் கன அடி நீா், வைகை பூா்வீக பாசனப் பகுதி 1 மற்றும் 2-இல் உள்ள கண்மாய்களுக்கு வழங்கப்படும்.

அதேபோன்று, மே 29 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 3 நாள்கள் திறக்கபட உள்ள 267 மில்லியன் கன அடி நீா், வைகை பூா்வீக பாசனப் பகுதி 3 இல் உள்ள கண்மாய்களுக்கு வழங்கப்படும். எனவே கோடை கால வேளாண்மை செய்துள்ள விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூலை பெற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT