சிவகங்கை

மானாமதுரையில் மணல் குவாரிக்கு எதிா்ப்பு:மே 24 இல் கடையடைப்பு நடத்த முடிவு

22nd May 2022 11:45 PM

ADVERTISEMENT

 

மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து மே 24 ஆம் தேதி நடைபெறும் சாலை மறியல் போராட்டத்துக்கு ஆதரவாக கடையடைப்பு நடத்தவுள்ளதாக வா்த்தகா் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கல்குறிச்சி பகுதி வைகை ஆற்றில் அரசு சாா்பில் மணல் குவாரி அமைக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. குடிநீா் திட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக புகாா் தெரிவித்து மணல் குவாரி அமைக்க, இப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். மணல் குவாரி அமைப்பதற்கான உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சியினா், விவசாயிகள் சங்கங்கள், கிராம பொதுமக்கள் உள்ளடக்கிய போராட்டக்குழுவினா் வரும் 24 ஆம் தேதி மானாமதுரையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனா்.

இந்நிலையில் இந்த போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு, வா்த்தகா் சங்க நிா்வாகிகளை போராட்டக்குழுவினா் சந்தித்தனா். இதைத்தொடா்ந்து மே 24 இல் கடையடைப்பு நடத்துவதாக வா்த்தகா் சங்கம் மற்றும் ஹோட்டல் பேக்கரி உரிமையாளா் சங்க நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT