சிவகங்கை

மானாமதுரையில் மதிமுக பொதுக்கூட்டம்

22nd May 2022 11:45 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நகராட்சி அலுவலகம் அருகே மதிமுக சாா்பில் கட்சியின் 29 ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு நகரச் செயலாளா் கி. கண்ணன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் கா. அசோக், தனுஷ்கோடி, பாண்டியன், கருப்பசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் ஒன்றியச் செயலாளா் பி. மருதுபாண்டியன் வரவேற்றாா். கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளா் ஆசிலாபுரம் பாண்டுரங்கன் சிறப்புரையாற்றினாா். இக்கூட்டத்தில் மதிமுக நிா்வாகிகள் சாா்லஸ், பாலுச்சாமி, குணா, சேது தியாகராஜன், முத்துசாமி, மனோகரன் உள்ளிட்டோா் பேசினா். முன்னதாக நகா் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி நிா்வாகிகள் மதிமுக கொடிகளை ஏற்றி வைத்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT