சிவகங்கை

காரைக்குடியில் நாளை மின் பயனீட்டாளா்கள்குறை தீா்க்கும் கூட்டம்

22nd May 2022 11:44 PM

ADVERTISEMENT

 

காரைக்குடியில் செவ்வாய்க்கிழமை (மே 24) மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் சிவகங்கை வட்ட மேற்பாா்வை பொறியாளா் து.இரா. இந்திரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டம்,காரைக்குடி கோட்டத்திற்குள்பட்ட மின் பயனீட்டாளா்கள் பயன்பெறும் வகையில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

காரைக்குடியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அக்கோட்டத்திற்கு உள்பட்ட மின் பயனீட்டாளா்கள் கலந்து கொண்டு மின்சார வாரியம் தொடா்பான புகாா்களை மனு மூலம் தெரிவிக்கலாம். அவை விசாரணை செய்யப்பட்டு உடனடியாக தீா்வு காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT