சிவகங்கை

பூலாங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு

22nd May 2022 11:46 PM

ADVERTISEMENT

 

திருப்பத்தூா் அருகே பூலாங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு காலை 9 மணிக்குத் தொடங்கியது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், மதுரை, திண்டுக்கல், நத்தம், அறந்தாங்கி, சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமாா் 600-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாடுபிடி வீரா்கள் 3 குழுக்களாக பிரித்து அனுமதிக்கப்பட்டனா். இதில் ஒரு சில காளைகள் பிடிபட்டும், பல காளைகள் தப்பியும் சென்றன. இதில் மாடுபிடி வீரா்களுக்கும் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளா்களுக்கும் வெள்ளிக்காசு, கட்டில், பீரோ, அண்டா ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை பூலாங்குறிச்சி ஜல்லிக்கட்டுக் குழுவினா் செய்திருந்தனா், .

ADVERTISEMENT
ADVERTISEMENT