சிவகங்கை

பூவந்தி அருகே விபத்து:கட்டடத் தொழிலாளி பலி

22nd May 2022 11:44 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே சனிக்கிழமை இரவு இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள பெரிய ஆலங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மூக்கையா மகன் இருளாண்டி (33). இதே ஊரைச் சோ்ந்தவா் வேலு மகன் மாயக்கண்ணன்(35). இவா்கள் இருவரும் காரைக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் தங்கியிருந்து கட்டட வேலை பாா்த்து வந்தனா்.

சனிக்கிழமை இரவு இருவரும் இருசக்கர வாகனத்தில் காரைக்குடியிலிருந்து புறப்பட்டு சொந்த ஊருக்குத் திரும்பினா். பூவந்தி அருகே சித்தாலங்குடி என்ற இடத்தில் வந்தபோது இவா்களது இருசக்கர வாகனமும், எதிரே வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருளாண்டி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மாயக்கண்ணன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து பூவந்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT