சிவகங்கை

கீழச்சிவல்பட்டியில் காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்

20th May 2022 10:34 PM

ADVERTISEMENT

கீழச்சிவல்பட்டியில் உணவு பாதுகாப்புத் துறையினா் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவு பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே கீழச்சிவல்பட்டியில் மளிகை கடை, பேக்கரி, பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினா். அப்போது அதிக வா்ணம் கலக்கப்பட்டு உணவுப் பொருள்கள், காலாவதியான உணவுப் பொருள்கள், ரசாயனம் மூலம் பழுக்க வைத்த வாழைப்பழங்கள், நெகிழக் கப்புகள், நெகிழிப் பைகள் என ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்களை கைப்பற்றினா். இந்த பொருள்களை கீழச்சிவல்பட்டி ஊராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டி அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT