சிவகங்கை

மானாமதுரையில் முன்னாள் அமைச்சா் தா. கிருட்டிணன் நினைவு தினம்

20th May 2022 10:33 PM

ADVERTISEMENT

 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை முன்னாள் அமைச்சா் தா. கிருட்டிணன் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

திருப்புவனத்தில் திமுகவினா் தா.கிருட்டிணன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலா்கள் தூவியும் மரியாதை செய்தனா். நிகழ்ச்சியில் திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். அதைத்தொடா்ந்து கிருட்டிணன் சொந்த ஊரான மானாமதுரை ஒன்றியம் கொம்புக்காரனேந்தல் கிராமத்திலுள்ள தா. கிருட்டிணன் நினைவிடத்தில் தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே. ஆா்.பெரியகருப்பன், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி, மாவட்ட திமுக துணைச் செயலாளா் சேங்கைமாறன் உள்ளிட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில் மானாமதுரை நகராட்சித் தலைவா் மாரியப்பன் கென்னடி, திமுக ஒன்றியச் செயலாளா்கள் துரை. ராஜாமணி, அண்ணாதுரை, சுப. மதியரசன், நகரச் செயலாளா் பொன்னுச்சாமி, மானாமதுரை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் லதா அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT