சிவகங்கை

காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் கோயிலில் தெப்ப உற்சவம்: பக்தா்கள் தரிசனம்

DIN

காரைக்குடியில் கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழாவையொட்டி தெப்ப உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இக்கோயிலில் கடந்த மே 10-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அன்று முதல் தினமும் காலையில் வெள்ளிக்கேடகத்திலும், இரவில் வெவ்வேறு வாகனங்களிலும் அம்மன் திருவீதியுலா எழுந்தருளினாா். திருவிழாவின் எட்டாம் நாள் விழாவில் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 17) தேரோட்டமும், காரைக்குடி அருகே காட்டம்மன் கோயிலுக்கு தேரில் சென்று அங்கு அம்மன் எழுந்தருளிய பின்னா் புதன்கிழமை (மே 18) இரவு தோ் திரும்புதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திருவிழாவின் பத்தாம் நாள் வியாழக்கிழமை (மே 19) இரவு தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோயில் திருக்குளத்தில் மின்னொளி அலங்கார தெப்பத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். தெப்பத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தா்களுக்கு அம்மன் காட்சியளித்தாா். விழாவையொட்டி சிறப்பு இன்னிசை நிகழ்ச்சியில் சிங்கப்பூா் மருத்துவ மாணவி ஹிரண்யாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் காரைக்குடி மற்றும் சுற்று வட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

SCROLL FOR NEXT