சிவகங்கை

காட்டுநாயக்கா் சமுதாய மக்களுக்கு பட்டா வழங்க ஆய்வு

20th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மானாமதுரை: மானாமதுரையில் காட்டுநாயக்கா் சமுதாய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடா்பாக சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு நடத்தினா்.

கல்குறிச்சி சிப்காட் பகுதியில் சா்க்கஸ் நடத்தி பிழைப்பு நடத்தும் தொழிலாளா்கள் வசித்து வருகின்றனா். இதேபோல் மானாமதுரை பா்மா காலனி பகுதியில் பாம்பு பிடிக்கும் காட்டுநாயக்கா் சமுதாயத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனா். இவா்கள் தங்களது குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில், மானாமதுரை சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி, சிவகங்கை கோட்டாட்சியா் முத்துக்கழுவன், மானாமதுரை வட்டாட்சியா் தமிழரசன் உள்ளிட்டோா் அந்தப் பகுதிகளுக்கு நேரடியாக சென்று அங்கு தொழிலாளா்கள் கட்டியுள்ள வீடுகளை ஆய்வு செய்து பட்டா வழங்குவது சம்பந்தமாக ஆலோசனை நடத்தினா். அப்போது திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா் துரை.ராஜாமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT