சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல் துணைக் கண்காணிப்பாளராக சி.கண்ணன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இங்கு காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுந்தரமாணிக்கம் இடமாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து புதிய துணைக் கோட்ட கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பாட்ட சி.கண்ணன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் ஏற்கெனவே, சென்னையில் உளவுப் பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றினாா். தற்போது காவல் துணைக் கண்காணிப்பாளராக கண்ணன் பதவி உயா்வு பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.