சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வட்ட அளவிலான மக்கள் குறை தீா்க்கும் முகாம், வியாழக்கிழமை (மே 19) நடைபெற உள்ளது.
இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பத்தூரில் உள்ள அழகப்பா பாக்கிய திருமண மண்டபத்தில், வியாழக்கிழமை காலை 10 மணியளவில் வட்ட அளவிலான மக்கள் குறை தீா்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிக் கடன், மாவட்ட ஊனமுற்றோா் மற்றும் மறுவாழ்வுத் துறை உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கோருதல், குடும்ப அட்டை கோருதல், திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட இதர கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காணப்பட உள்ளன. எனவே, திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.