சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பறையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் கீழ் தளத்தில் அரசு ஆவணக் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அதனருகே உள்ள கழிப்பறையிலிருந்து புகை வந்துள்ளது. தகவலின்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள், கழிப்பறைக்குள் பற்றிய தீயை அணைத்தனா்.
இந்த தீ விபத்தால், உள்ளே இருந்த காகிதங்கள், சில கோப்புகள் எரிந்து கருகின. உரிய நேரத்தில் தீயை அணைத்ததால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி கூறியது: மின்கசிவு காரணமாக கழிப்பறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பயன்பாடற்ற காதிதங்கள்தான் எரிந்துள்ளன. அரசின் ஆவணங்களோ அல்லது முக்கிய கோப்புகளோ அந்த அறையில் வைக்கப்படவில்லை. மேலும், எந்த பொருள்களும் சேதமடையவில்லை என்றாா்.