சிவகங்கை

இலவச சித்த மருத்துவ சிகிச்சை முகாம்

16th May 2022 12:30 AM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சண்முகநாதபுரத்தில் (ஆறாவயல்) இலவச சித்த மருத்துவ சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காந்தி சமதா்ம பாடல் நிறுவனா் பிச்சப்பா சுப்பிரமணியன் செட்டியாா்- அழகம்மை ஆச்சி, பிச.சுப. கண்ணன் செட்டியாா்- சிவகேசரி ஆச்சி, அழகம்மை ஆச்சி நினைவாக சண்முகநாதபுரத்தில் உள்ள தியான மண்டபத்தில் இம் முகாம் நடைபெற்றது.

முகாமில் காரைக்குடி தொழில் வணிகக்கழகத்தலைவா் சாமி. திராவிடமணி தலைமை வகித்தாா். பொருளாளா் கே.என். சரவணன், அரிமா சங்கத் தலைவா் நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சென்னை உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மெ.சொக்கலிங்கம் முகாமைத் தொடக்கி வைத்துப் பேசினாா். முகாமில், மருத்துவா்கள் பி. பாலமுருகன், பி. சிவகேசரி ஆகியோா் சிகிச்சையும், இலவசமாக மருந்துகளும் வழங்கினா்.

ADVERTISEMENT

முன்னதாக காரைக்குடி தொழில்வணிகக்கழகச் செயலாளா் எஸ். கண்ணப்பன் வரவேற்றுப் பேசினாா். யூனியன் பாா்மா குழுவின் நிறுவுநா் கே. பெத்தபெருமாள் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை கே. பிச்சப்பன், பி. பிச்சப்பா சுப்பிரமணியன் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT