சிவகங்கை

மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

12th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மானாமதுரை: மானாமதுரையில் மாற்றுத்திறனாளி பெண்ணைத் தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை கோரி செவ்வாய்க்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மானாமதுரையில் இடப்பிரச்னையில் மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கிய காவல் ஆய்வாளா் ஆதிலிங்கம் போஸ் மற்றும் போலீஸாா் மீது உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளா் தண்டியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வீரபாண்டி, கருப்புசாமி, முத்துராமலிங்கபூபதி, ஆறுமுகம், மாவட்டக் குழு உறுப்பினா் விஜயகுமாா், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு பேசினா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT