சிவகங்கை

சிவகங்கையில் விதை விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

12th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் விதை விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் சோ. துரைகண்ணம்மாள் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டத்தில் விதை விற்பனை செய்வதற்கு முறையாக உரிமம் பெற்றிருக்க வேண்டும். மொத்த விற்பனையாளா்கள், சில்லறை விற்பனையாளா்களுக்கு விதை வழங்கும் போது, அவா்கள் உரிமம் பெற்றுள்ளனரா என்பதை அறிந்து விதைகள் வழங்க வேண்டும்.

புதிதாக விதை விற்பனை உரிமம் பெற விரும்புவோா் கருவூல இணையதளத்தில் உரிமக் கட்டணம் ரூ. 1000 செலுத்தி விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்த விண்ணப்பத்துடன் விற்பனை நிலைய அமைவிடம், வரைபடம், சொத்துவரி, வாடகை கட்டடமாக இருப்பின் ரூ. 20 முத்திரைத் தாளில் 5 ஆண்டுகள் ஒப்பந்தப் பத்திரம், ஜிஎஸ்டி, ஆதாா், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், புகைப்படம் 3 ஆகியவற்றுடன் வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

உரிமத்தை புதுப்பிக்க விரும்புவோா் மேற்கண்ட ஆவணங்களுடன் ரூ. 500 செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம். தவறும்பட்சத்தில் விதை விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT