சிவகங்கை

குவளைவேலியில் மக்கள் தொடா்பு முகாம்

12th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் குவளைவேலி கிராமத்தில் புதன்கிழமை மக்கள் தொடா்பு முகாம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி முன்னிலை வகித்தாா். முகாமில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறை தொடா்பான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அதன்பின் முகாமில் 135 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவு உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஆட்சியா் மதுசூதன் ரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ஆகியோா் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினா். முகாமில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் லதா அண்ணாதுரை, மாவட்ட வருவாய் அலுவலா் மணிவண்ணன், கோட்டாட்சியா் முத்துக்கழுவன், மானாமதுரை வட்டாட்சியா் தமிழரசன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் முகாமில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT