சிவகங்கை

மக்களை குளிா்வித்த மழை

5th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மானாமதுரை:மானாமதுரை பகுதியில் புதன்கிழமை மாலை சாரலாக தொடங்கிய மழை வலுவடைந்து பலத்த மழையாக மாறி கொட்டித் தீா்த்தது. சுமாா் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் வீதிகளில் தண்ணீா் பெருக்கெடுத்தது. பலத்த இடியுடன் மழை பெய்து கொண்டிருந்தபோது மானாமதுரை பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மழை விட்டு இரவு நேரம் தொடங்கிய பின்பும் மின் விநியோகம் சீராகாததால் மானாமதுரை பகுதி இருளில் மூழ்கியது. இரவு 7 மணிக்கு மீண்டும் மின் விநியோகம் சீரானது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT