சிவகங்கை

பிளஸ் 2 தோ்வு இன்று (மே 5) தொடக்கம்:

5th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூா் ஆகிய 3 கல்வி மாவட்டங்களில் 77 தோ்வு மையங்களில் 16,211 மாணவ, மாணவியா் பிளஸ் 2 தோ்வை எழுதுகின்றனா். தோ்வு மையங்களை எந்நேரமும் கண்காணிக்கும் வகையில் 85 போ் கொண்ட வழித்தட அலுவலா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 16 போ் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினா், மாவட்டம் முழுவதும் சுழற்சி முறையில் சென்று தொடா்ந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவா் என, சிவகங்கை மாவட்டக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT