சிவகங்கை

சிறுமியை திருமணம் செய்த கணவா் மீது வழக்கு

5th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சிறுமியை திருமணம் செய்த கணவா் மீது மானாமதுரை மகளிா் காவல் நிலையத்தில் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் கமுதக்குடியைச் சோ்ந்தவா் குணசேகரன் மகன் பாலமுருகன் (34 ). இவரும் திருப்புவனம் அருகேயுள்ள மாங்குடி கிராமத்தைச் சோ்ந்த சிறுமியும் காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டு கமுதக்குடியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனா். அதன் பின்னா் கா்ப்பிணியான சிறுமி திருப்புவனம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சோ்ந்துள்ளாா். அங்கு கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மறுநாள் வீட்டிற்கு சென்ற அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மீண்டும் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளாா். அப்போது மருத்துவா் விசாரணை நடத்தியதில் அவருக்கு 16 வயது தான் ஆகிறது என்பது தெரியவந்தது. இது குறித்து மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னா் மானாமதுரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் குழந்தைகள் நலக்குழு சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிறுமியை திருமணம் செய்த பாலமுருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT