சிவகங்கை

இளையான்குடி அருகே வீடு புகுந்து 23 பவுன் நகைகள் திருட்டு

5th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்குள் புகுந்து 23 பவுன் நகைகள், ரொக்கப்பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இளையான்குடி வட்டம் சாலைக்கிராமம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் சண்முகராஜா(42). இவா் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறாா். செவ்வாய்க்கிழமைஇரவுவீட்டில் இருந்த பீரோவைத் திறந்து சண்முகராஜா பணம் எடுத்துக்கொண்டு சாவியை அப்படியே பீரோவில் விட்டுவிட்டு

கேரளாவுக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு திறந்து கிடந்த பின்பக்க வாசல் வழியாக வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் திறந்த நிலையில் இருந்த பீரோவில் இருந்த 23 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பிச்சென்றனா். புதன்கிழமை காலை இச்சம்பவம் தெரியவந்ததும் சண்முகராஜாவின் மனைவி நாகஜோதி சாலைகிராமம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT