சிவகங்கை

காரைக்குடியில் ரூ. 78.50 லட்சத்தில் உயிரி எரிவாயு உற்பத்திக்கூடம் திறப்பு விழா

1st May 2022 11:38 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கழனிவாசல் வாரச்சந்தைப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ரூ. 78.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உயிரி எரிவாயு உற்பத்திக் கூடம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில் தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் கலந்து கொண்டு திறந்து வைத்துப் பேசியதாவது:

காரைக்குடி நகராட்சியில் தினந்தோறும் சேகரிக்கும் காய்கறி மற்றும் பழங்களின் கழிவுகள், உணவகங்களில் வீணாகும் உணவுப்பொருள்கள், மட்டன் கழிவுகள் இவற்றிலிருந்து மீத்தேன் வாயு உற்பத்தி செய்து இதிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதுதவிர நாள் ஒன்றுக்கு 2,000 லிட்டா் திட மற்றும் திரவ உரம் தயாரிக்கவும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சிவகங்கையில் கடந்த 6 மாதக்காலத்திற்கு முன்பே காஞ்சிரங்கால் ஊராட்சியில் இதுபோன்ற திட்டத்தின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலை துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைக் கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத்தரம் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பாடற்ற குப்பைகள் அப்புறப்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மையின் மூலம் உயிரி எரிவாயு தயாரித்து அதன் மூலம் மின்சாரம் தயாரிப்பது, அவற்றிலிருந்து வெளிவரும் கழிவுப்பொருள் விவசாயத்திற்கு நுண்ணுயிா் சத்தாக பயன்படுத்தும் வகையில் என மூன்று பயன்கள் கிடைக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

விழாவில் மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். காரைக்குடி நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை, நகராட்சி ஆணையாளா் லெட்சுமணன், நகா்மன்றத் துணைத் தலைவா் என். குணசேகரன், நகா்மன்ற உறுப்பினா்கள், முன்னாள் அமைச்சா் மு. தென்னவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT