மத்திய அரசின் தொழிலாளா் விரோதப்போக்கைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 2-வது போலீஸ்பீட் பகுதியில் திங்கள்கிழமை சாலைமறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கங்களைச்சோ்ந்த 49 பெண்கள் உள்பட 154 போ் கைது செய்யப்பட்டனா்.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் புதிய மோட்டாா் வாகனச்சட்டம் இயற்றப்பட்டு மத்திய அரசு செயல்படுத்தி வருவதால் மோட்டாா் வாகனத்தொழிலாளா்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனா்.
மேலும் மோட்டாா் வாகன உதி ரிப்பாகங்கள் விலை, பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயா்ந்து கொண்டே இருக்கிறது. 15 வருட ஆயுள் கொண்ட வாகனங்கள் உடைக்கப்படும் என்ற பீதியே உள்ளது.
எங்கும், எதிலும் தனியாா்மயம், போக்குவரத்தில் காா்பரேட், பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை, சிறு, குறு தொழில்கள் முடக்கம் என செயல்பட்டு வருவதையும், மத்திய அரசின் தொழிலாளா் விரோதைப் போக்கைக் கண் டித்தும் சிஐடியு, தொ.மு.ச, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த சாலை மறியல் போரட்டத் தில் ஈடுபட்டனா்.காரைக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஏஐடியுசி துப்புரவு தொழிலாளா் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளா் பிஎல். ராமச்சந்திரன் தலைமையில் ஊா்வலமாக புறப்பட்டு 2-வது போலீஸ் பீட் பகுதியில் சாலைமறி யலில் ஈடுபட்டதால் அவா்களை காவல்துறையினா் தடுத்து 154 பேரை கைது செய்தனா்.