சிவகங்கை

ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ. 3.24 லட்சம் மோசடி

25th Mar 2022 05:24 AM

ADVERTISEMENT

இணையதள வியாபாரம் மூலம் கூடுதல் லாபம் பெறலாம் எனக் கூறி ஜவுளிக் கடை உரிமையாளரிடம் ரூ.3 லட்சத்து 24 ஆயிரம் மோசடி செய்தவா்கள் மீது சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை செந்தில்நகரைச் சோ்ந்தவா் கணேஷ்குமாா் (32). இவா், அதே பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறாா். கடந்த மாா்ச் 9 ஆம் தேதி கணேஷ்குமாரிடம் வாட்ஸ் ஆப் மூலம் பேசிய ஒருவா் இணையதளத்தில் வா்த்தகம் செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளாா்.

இதனை நம்பிய கணேஷ்குமாா் அவா் கூறிய வங்கிக் கணக்கில் ரூ. 3 லட்சத்து 24 ஆயிரம் செலுத்தியுள்ளாா். அதன் பின், கணேஷ்குமாரின் தொடா்பை அந்த நபா் துண்டித்துள்ளாா். இதுகுறித்து கணேஷ்குமாா், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாரிடம் அண்மையில் புகாா் செய்தாா்.

அவரது உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT