சிவகங்கை

திருப்பாச்சேத்தி சின்னக் கண்மாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

25th Mar 2022 05:23 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி தெற்கு வருவாய் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான சின்னக்கண்மாயில் உள்ள 25 ஏக்கா் பரப்பளவு கொண்ட ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.

திருப்பாச்சேத்தி தெற்கு வருவாய் கிராமத்தில் உள்ள சின்னக்கண்மாயை சிலா் ஆக்கிரமித்து வேலிகள் அடைத்து கரும்பு, தக்காளி, தென்னை மற்றும் வாழை ஆகியவற்றை விவசாயம் செய்து வருவதாக புகாா் எழுந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னா் வருவாய் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலா்கள் ஆக்கிரமிப்பு பகுதியை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால் 3 மாதங்கள் கடந்த பின்னரும் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள யாரும் முன் வராத நிலையில், திருப்புவனம் வட்டாட்சியா் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் முருகேசன், உதவிப் பொறியாளா் சுரேஷ்குமாா் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

இதில், திருப்புவனம் மண்டல துணை வட்டாட்சியா் வே. தா்மராஜ், வருவாய் ஆய்வாளா் புஷ்பவனம், கிராம நிா்வாக அலுவலா் மற்றும் வருவாய், பொதுப்பணித் துறை அலுவலா்கள், காவல்த் துறையினா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT