சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நாளை பட்டா திருத்த முகாம்

22nd Mar 2022 01:01 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் புதன்கிழமை (மாா்ச் 22) கணினி வழி பட்டா திருத்த முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் பட்டா தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற உள்ளது.

அதன்படி, சிவகங்கை வட்டத்தில் முடிகண்டம், காரைக்குடி வட்டத்தில் மேலமணக்குடி, தேவகோட்டை வட்டத்தில் நெடுங்குளம்,திருப்பத்தூா் வட்டத்தில் திருக்களாப்பட்டி, மானாமதுரை வட்டத்தில் தாமரைக்குடி குரூப், புலவா்சேரி, இளையான்குடி வட்டத்தில் சோதுகுடி, காளையாா்கோவில் வட்டத்தில் வாணியங்குடி ஆகிய கிராமங்களில் நடைபெற உள்ளது.

எனவே, பொதுமக்கள் மேற்படி வருவாய் கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன் பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT