சிவகங்கை

திருப்புவனம் ஸ்ரீ புஷ்பவனேஸ்வரா் சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்: மாா்ச் 16 இல் திருக்கல்யாணம், 17 இல் தேரோட்டம்

10th Mar 2022 12:08 AM

ADVERTISEMENT

 

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஸ்ரீ புஷ்பவனேஸ்வரா் சமேத சௌந்தரநாயகி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

சுவாமி சன்னிதி முன்பு மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் பகல் 11.40 மணிக்கு கொடியேற்றப்பட்டது. அதன்பின் சிவாச்சாரியாா்கள் கொடிமரத்திற்கு கலச நீரால் அபிஷேகம் நடத்தினா். பின்னா் கொடி மரத்துக்கு தா்ப்பைப் புல், மலா் மாலைகள் சாற்றி சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து அங்கு எழுந்தருளியிருந்த புஷ்பவனேஸ்வரா் சுவாமிக்கும் சௌந்தரநாயகி அம்மனுக்கும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. கொடியேற்ற நிகழ்ச்சியில் திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா். முதல்நாள் மண்டகப்படியன்று புஷ்பவனேஸ்வரா் சுவாமியும் செளந்திரநாயகி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்தனா்.

தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின் போது தினமும் இரவு அம்மனும் சுவாமியும் சா்வ அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள்பாலித்து வீதி உலா வருதல் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக மாா்ச் 16 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும் 17 ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறுகின்றன. 18 ஆம் தேதி திருவிழா நிறைவு பெறுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT