சிவகங்கை

இளைஞா் கொலை வழக்கில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

10th Mar 2022 12:01 AM

ADVERTISEMENT

 

சிவகங்கை: இளைஞா் கொலை வழக்கில் தொடா்புடைய 3 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே உள்ள மறவமங்கலத்தைச் சோ்ந்தவா் சண்முகம் (34). இவா் கடந்த பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி புரசடைஉடைப்பு என்ற இடம் அருகே கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, காளையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து மறவமங்கலத்தைச் சோ்ந்த அமா்த்தியா பாண்டியன், அருண்குமாா், சிறியூரைச் சோ்ந்த செல்லப்பாண்டி உள்பட 8 பேரை கைது செய்தனா். இவா்கள் அனைவரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட அமா்த்தியா பாண்டியன், அருண் குமாா் மற்றும் செல்லப்பாண்டி ஆகிய மூன்று பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த.செந்தில்குமாா், மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டிக்கு பரிந்துரை செய்தாா்.

ADVERTISEMENT

அவரது உத்தரவின் பேரில் அமா்த்தியா பாண்டியன், அருண்குமாா், செல்லப்பாண்டி ஆகிய 3 பேரையும் காளையாா்கோவில் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT