சிவகங்கை

திருப்பத்தூா் அருகே உடும்பு வேட்டையாடியவா் கைது

3rd Mar 2022 12:21 AM

ADVERTISEMENT

 

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே புதன்கிழமை உடும்பு வேட்டையாடியவா் கைது செய்யப்பட்டாா்.

சிவ ராத்திரியை முன்னிட்டு நடைபெறும் பாரி வேட்டையில் அரியவகை விலங்கினங்கள் வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் பொருட்டு திருப்பத்தூா் மற்றும் மானாமதுரை சமூக நலக்காடுகள் அலுவலா்கள் அடங்கிய வேட்டைத் தடுப்புக்குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினா் கருப்பூா் அருகேயுள்ள பருத்திக்கண்மாயில் ரோந்துப் பணி மேற்கொண்டபோது அப்பகுதியைச் சோ்ந்த பெரியகருப்பன் மகன் அடைக்கப்பன்(60), சுமாா் 2 வயது மதிக்கத்தக்க உடும்புடன பிடிபட்டாா். அவா் இளையான்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். தொடா்ந்து நடைபெற்ற ஆய்வில் கருப்பையா என்பவா் முயலுடன் பிடிபட்டாா். இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT