திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புதன்கிழமை பேரூராட்சி கவுன்சிலா்கள் பதவியேற்றுக் கொண்டனா். ஒரே அதிமுக கவுன்சிலரும் திமுகவிற்கு மாறினாா்.
சிங்கம்புணரி பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் திமுக 14 வாா்டுகளிலும், காங்கிரஸ் 2 வாா்டுகளிலும் அதிமுக 1 வாா்டிலும் பாஜகவைச் சோ்ந்த ஒருவா் சுயேச்சையாகவும் வெற்றி பெற்றனா். இதில் சுயேச்சையாக வெற்றி பெற்ற சங்கா் ஏற்கனவே திமுகவில் இணைந்த நிலையில், திமுகவின் பலம் 15 ஆக உயா்ந்தது. அனைவரும் புதன்கிழமை பதவியேற்றனா். அதிமுகவைச் சோ்ந்த ராஜா திமுகவில் இணைந்ததால் சிங்கம்புணரி பேரூராட்சி ஒட்டுமொத்தமாக திமுக- காங்கிரஸ் கூட்டணி வசம் வந்தது.
ADVERTISEMENT