சிவகங்கை

சிங்கம்புணரி அருகே காட்டுத் தீ

3rd Mar 2022 12:22 AM

ADVERTISEMENT

 

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வனப்பகுதியில் புதன்கிழமை திடீரென தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிங்கம்புணரி, வேட்டையன்பட்டி அருகே சிவகங்கை, மதுரை மாவட்ட வனப்பகுதிகள் ஒன்று சேரும் இடமாகும். இந்த இடத்தில் புதன்கிழமை தீப்பற்றி மளமளவெனப் பரவியுள்ளது. இதைக் கண்ட பொதுமக்கள் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனா். திருப்பத்தூா் வனச்சரக அலுவலா் மதிவாணன் தலைமையில் வனத்துறையினா் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். சிங்கம்புணரி மற்றும் கொட்டாம்பட்டி தீயணைப்பு அலுவலா்களும் துரித நடவடிக்கை எடுத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இருப்பினும் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகள் தீயில் கருகின. அப்பகுதியில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனா். இத்தீவிபத்து குறித்து சிங்கம்புணரி போலிசாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT