சிவகங்கை

காரைக்குடி பகுதியில் மாா்ச் 5 இல் மின் தடை

3rd Mar 2022 12:16 AM

ADVERTISEMENT

 

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி துணை மின்நிலையத்தில் வரும் சனிக்கிழமை (மாா்ச் 5) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி நகா் பகுதிகள், பேயன்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் (ஹவுசிங் போா்டு), செக்காலைக்கோட்டை, பாரி நகா், கல்லூரிச்சாலை, செக்காலைச்சாலை, புதிய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், கோவிலூா் சாலைகள், செஞ்சை மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என்று காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT