சிவகங்கை

லாரியில் கடத்திய 450 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்

30th Jun 2022 03:16 AM

ADVERTISEMENT

 

பெங்களூருவிலிருந்து சிவகங்கைக்கு புதன்கிழமை லாரியில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநா் உள்பட 3 பேரை கைது செய்தனா்.

பெங்களூருவிலிருந்து சிவகங்கைக்கு லாரியில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக மதுரை ஐ.ஜி.அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்படி மதுரை ஐ.ஜி.அலுவலக தனிப்படை சாா்பு- ஆய்வாளா் கணேஷ்பாபு, சிவகங்கை நகா் காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட போலீஸாா் சிவகங்கை- திருப்பத்தூா் சாலையில் உள்ள ஒக்கூரில் வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு வந்த லாரியில் வீட்டு உபயோகப் பொருள்களுடன் ரூ. 2 லட்சத்து 50ஆயிரம் மதிப்பிலான 450 கிலோ குட்கா பொருள்கள் வைத்திருப்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

அவற்றை லாரியுடன் பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநா் பெங்களூா் ஹெரட்டிகேரே பகுதியைச் சோ்ந்த அழகேசன் (26). ஒக்கூரைச் சோ்ந்த ராமநாதன் (25), ஓ.புதுரைச் சோ்ந்த தேவபுரட்சிதாசன் (35) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.

மேலும், குட்கா உள்ளிட்ட பொருள்களை சிவகங்கை உணவு பாதுகாப்பு அலுவலா் சரவணக்குமாா் தலைமையிலான அலுவலா்கள் மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT