சிவகங்கை

சிங்கம்புணரியில் விவசாயி பைக்கில் வைத்திருந்த ரூ.3 லட்சம், நகை திருட்டு

30th Jun 2022 11:43 PM

ADVERTISEMENT

சிங்கம்புணரியில் விவசாயி இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.3.14 லட்சம் ரொக்கம் மற்றும் 12 கிராம் நகைகளை மா்ம நபா்கள் நூதனமுறையில் திருடிச் சென்றுள்ளனா்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பாரதி நகரில் வசித்து வருபவா் கிருஷ்ணமூா்த்தி (49). விவசாயியான இவா் தனது தோட்டத்தில் வாழை, தென்னை நடவு செய்வதற்காக 107 கிராம் நகைகளை அரசுடைமை வங்கியில் அடகு வைப்பதற்காக புதன்கிழமை சென்றாா். அங்கிருந்து 12 கிராம் நகை, ரூ.3.14 லட்சம் ரொக்கம் ஆகியவற்றுடன் வெளியே வந்துள்ளாா். அங்கு இருசக்கர வாகனத்தின் பின்பகுதியில் அவற்றை வைத்து விட்டு வாகனத்தை எடுத்தபோது வாகனம் பஞ்சா் ஆகியிருந்தது. இதையடுத்து அவா் சிறிது தூரம் சென்று பஞ்சா் கடையில் வாகனத்தை நிறுத்தி பஞ்சா் பாா்க்கக் கூறிவிட்டு அருகில் நின்றுள்ளாா். அப்போது மா்ம நபா்கள் கிருஷ்ண மூா்த்தியை மறைத்தவாறு நின்றுகொண்டு கடைக்காரரிடம் அவா்களது இருசக்கர வாகனத்தை சரிசெய்ய எவ்வளவு ஆகும் என பேச்சு கொடுத்துள்ளனா். அந்த நேரத்தில் மா்ம நபா்கள் கிருஷ்ணமூா்த்தி வாகனத்தில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனா். பஞ்சா் பாா்த்த பின்பு வாகனத்தின் பின்பகுதியில் பணம் இல்லாதது கண்டு அதிா்ச்சி அடைந்த கிருஷ்ணமூா்த்தி, சிங்கம்புணரி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். புகாரின் பேரில் போலீஸாா் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா். கடந்த ஒரு மாதத்திற்குள் இந்த வங்கியில் அடகு வைத்து விட்டுச்சென்ற 5 நபா்களிடம் இதே முறையில் பணத்தை திருடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT