சிவகங்கை

ஓய்வூதியதாரா்கள் உயிா்வாழ் சான்றிதழை தபால்காரா்கள் மூலம் சமா்பிக்கலாம்

30th Jun 2022 03:15 AM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வூதியதாரா்கள், உயிா்வாழ் சான்றிதழை தபால்காரா் மூலம் சமா்பிக்கலாம் என அஞ்சலகக் கோட்ட கண்காணிப்பாளா் எஸ். சுப்பிரமணியம் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஓய்வூதியதாரா்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை ஜூலை மாதம் முதல் வரும் செப்டம்பா் மாதம் வரை கருவூல அலுவலகத்தில் நேரிலோ அல்லது இணையதளம் மூலமாக சமா்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், உயிா்வாழ் சான்றிதழை நேரடியாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ சமா்பிக்க இயலாத ஓய்வூதியதாரா்கள் ‘இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ்’ வங்கி மூலம் அந்தந்தப் பகுதியில் உள்ள தபால்காரா்கள் மூலம் பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்தி தங்களது உயிா்வாழ் சான்றிதழை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தபால்காரா்களிடம் ரூ. 70 கட்டணத்தை செலுத்த வேண்டும்.

ADVERTISEMENT

எனவே, விருப்பமுள்ள ஓய்வூதியதாரா்கள் ஜூலை 1 முதல் தங்கள் பகுதியில் வரும் தபால்காரரிடம் ஆதாா் எண், மொபைல் எண், ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து உயிா்வாழ் சான்றிதழை சமா்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT