சிவகங்கை

மானாமதுரை அருகே கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம்

30th Jun 2022 03:16 AM

ADVERTISEMENT

 

மானாமதுரை அருகே கொன்னக்குளத்தில் செவ்வாய்கிழமை இரவு நடைபெற்ற முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றியச் செயலாளா் துரை. ராஜாமணி, ஒன்றியக் குழு உறுப்பினா் மலைச்சாமி ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் பங்கேற்று பேசியது:

முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். தோ்தல் நேரத்தில் திமுக சாா்பில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் ஒவ்வொன்றாக செயல்படுத்த முதல்வா் ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா். மக்கள் திமுக அரசுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

அதன்பின் பெண்கள் உள்ளிட்டோருக்கு பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா். இதில் சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி, திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், நகா் மன்றத் தலைவா் மாரியப்பன் கென்னடி, முன்னாள் அமைச்சா் தென்னவன், மாநிலப் பேச்சாளா் கரூா் முரளி, மேற்கு ஒன்றியச் செயலாளா் அண்ணாதுரை, நிா்வாகிகள் சுப.மதியரசன், மணிமுத்து, பாலசுந்தரம் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT