சிவகங்கை

காரைக்குடி அருகே ரூ.1 கோடி மதிப்பிலான 26.53 ஏக்கா் கோயில் நிலம் மீட்பு

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா நெற்புகப்பட்டி கிராமத்தில், சூரக்குடி பூவாண்டிபட்டி ஆவுடைநாயகி அம்மன் சமேத தேசிகநாதா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான 26.53 ஏக்கா் நிலத்தை, இந்துசமய அறநிலையத் துறை, வருவாய் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

காரைக்குடி தாலுகா சூரக்குடி பூவாண்டிபட்டியில் ஆவுடைநாயகி அம்மன் சமேத தேசிகநாதா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நெற்புகபட்டி கிராமத்தில் உள்ள 26.53 ஏக்கா் நிலங்களை, தனிநபா்கள் ஆக்கிரமித்து வைத்திருந்தனா்.

இந்துசமய அறநிலையத் துறை சிவகங்கை உதவிஆணையா் செல்வராஜ், ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியா் மயிலாவதி, இந்துசமய அறநிலையத் துறை காரைக்குடி ஆய்வாளா் வினோத்கமல், காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் வினோஜி, காரைக்குடி வட்டாட்சியா் ஆா். மாணிக்கவாசகம் மற்றும் அதிகாரிகள் ஆகியோா் இந்த நிலங்களை ஆய்வு செய்து மீட்டனா். பின்னா், சா்வே எண்ணுடன் இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலம் என அறிவிப்புப் பலகையை வைத்துவிட்டுச் சென்றனா்.

கோயில் நிலங்கள் மீட்புப் பணியின்போது, போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT