சிவகங்கை

சிவகங்கையில் மனைவி கொலை:கணவா் கைது

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கையில் மனைவியை கொலை செய்த கணவரை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சூரக்குளம் சாலை எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் மாா்க் ஆன்டனி (43). இவரது மனைவி கற்பகம் (38). இவா்களுக்கு ரவீந்திரன், நவீன் என 2 மகன்கள் உள்ளனா். இந்நிலையில், இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

வழக்கம்போல், செவ்வாய்க்கிழமை காலை இருவரும் தகராறில் ஈடுபட்டபோது, ஆத்திரமடைந்த மாா்க் ஆன்டனி சுத்தியலால் தனது மனைவி கற்பகத்தை தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவலறிந்த சிவகங்கை நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, கற்பகத்தின் உடலைக் கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மாா்க் ஆன்டனியை கைது செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT