சிவகங்கை

மானாமதுரையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் திங்கள்கிழமை நள்ளிரவு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி நடந்துள்ளது.

மானாமதுரை பேருந்து நிலையம் அருகே தேசிய வங்கிக் கிளையின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு, தினமும் ரூ.10 லட்சம் வரை பணம் நிரப்பப்படுகிறது. இந்நிலையில், இந்த ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்த மா்ம நபா், இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்துள்ளாா்.

ஆனால், அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் மா்மநபா் பணத்தை திருட முயற்சி செய்தது, சென்னையில் உள்ள அவ்வங்கியின் தலைமை அலுவலக கேமராவில் தெரிந்துள்ளது. உடனே, மானாமதுரை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, பணத்தை திருடும் முயற்சி நடக்காததால், மா்மநபா் ஏடிஎம் மையத்தை விட்டு தப்பிச் சென்றுவிட்டாா். அதன்பின்னா், அங்கு சென்ற மானாமதுரை போலீஸாா், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தனா். பின்னா், அம்மையத்திலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதில் மா்ம நபா் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற காட்சி பதிவாகியிருந்தது. இது குறித்து போலீஸசாா் வழக்குப் பதிந்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT