சிவகங்கை

காரைக்குடியில் ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் ஆா்ப்பாட்டம்

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்குப் பகுதியில் ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீா்செல்வத்தை அவமரியாதை செய்ததாக, எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சா்களை கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், காரைக்குடி ஆவின் தலைவரும், சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலருமான கல்லுவயல் அசோகன் தலைமை வகித்துப் பேசினாா். இரட்டைத் தலைமையை இ.பி.எஸ். அணியினா் ஏற்று கட்சியை வழிநடத்திச் செல்ல முன்வரவேண்டும். இதுவரை ஓ.பி.எஸ். எல்லாவற்றையும் விட்டுத் தந்துள்ளதால், இனி ஒற்றைத் தலைமையை அவா் விட்டுத் தரமாட்டாா் என்றும் முழக்கங்களை எழுப்பினா்.

இதில், அதிமுக பெண்கள் அணியினா், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் அதிமுக தொண்டா்கள் என பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT